கதைக் கோலங்கள்
|
கதைக் கோலங்கள் என்னும் இந்நூலில் நாற்பத்தைந்து கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் சில தத்துவங்களை வெளிப்படுத்துவதற்காக சமகாலச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டவை. சிலகதைகள் மிருகங்களை வைத்துத் தத்துவங்களை சொல்வதாக எழுதப்பட்டவை. இதில் வரும் சில கதைகள், ஆங்கில மொழிக் கதைகளை மீள் உருப்பெறச் செய்துள்ளேன். இன்னும் சில மொழிபெயர்ப்புக் கதைகளாக அடங்குகின்றன.
குறிப்பாக பைபிளில் வரும் ஆன்மீகத் தத்துவங்களை விளக்கும் கதைகளாகவும் எழுதியுள்ளேன். கதைக் கோலங்களில் வரும் கதைகளை பொருள், மொழி, நடை என்பவற்றைக் கொண்டு சிறுவர்களுக்கான பகுதியாகவும், வளர்ந்தோருக்கான கதைகளாகவும் வகுத்து வைத்துள்ளேன். எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எனது முதல் ஆக்கமாக இது வெளிவருகிறது.
இந்நூலினை உருவாக்க எனக்கு அரிய ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் கொடுத்த ஏ.எஸ். முனைவர் பேராசிரியர் சபா.ஜெயராசா, டாக்டர் சு.மகாலிங்கம், கலாபூஷணம் சு.துரைசிங்கம், திரு.தெ.மதுசூதனன் ஆகியோருக்கும் முகப்புப் படத்தினை வரைந்து தந்த ஓவியர் கனிவுமதி, உள்படங்கள் வரைந்துதவிய ஓய்வுநிலை அதிபர் வே.சண்முகராசா (சண்) மற்றும் தங்கள் வெளியீடாகவே வெளியிடும் சேமமடு பொத்தகசாலை அதிபர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரியன.
வி.அரியநாயகம்
|